திருவண்ணாமலை:மாட்டுப்பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் திவூடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. இந்த திருவூடல் கணவன் மனைவிக்கு இடையே நடைபெறும் ஊடலை விளக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வின் பின்னனியாவது, பிருங்கி மகரிஷி முக்தியடைவதற்காக அண்ணாலையார் நேரில் சென்று காட்சியளிக்க விரும்புகிறார். அதனை அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனிடம் கூறுகிறார். அதற்கு உண்ணாமுலையம்மன் அவர் தன்னை மதிக்கவில்லை உங்களை மட்டுமே மதிக்கின்றார். ஆகையால், நீங்கள் சென்று அவருக்கு காட்சியளித்து முக்தி அடைய செய்யக்கூடாது என்று கூறுவாதால் இருவருக்கும் இடையே ஊடல் ஏற்படுகிறது.