தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை கல்யாண சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் - அன்னாபிஷேகம்

திருவண்ணாமலை: அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கல்யாண சுந்தரேஸ்வருக்கு அப்பம், பழவகைகள், வடை அலங்காரத்தில் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

thiruvannamalai annamalaiyar

By

Published : Nov 12, 2019, 7:27 AM IST

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அனைத்து அஷ்டலிங்கங்களுக்கும் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. திருநேர் அண்ணாமலை மற்றும் அடி அண்ணாமலை கோயில்களில் உள்ள லிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

மேலும், அண்ணாமலையார் ஆலயத்தில் பெரிய நந்தி எதிரே உள்ள கல்யாண சுந்தேரஸ்வரர் சன்னதியில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு அப்பம், பழவகைகள், வடை போன்ற எண்ணற்ற உணவு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை கல்யாண சுந்தரேஸ்வருக்கு அன்னாபிஷேகம்

நேற்று ஐப்பசி மாத பௌர்ணமி என்பதால் கிரிவலத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: கிரிவலம் செல்ல உகந்த நேரம் - கோயில் நிர்வாகம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details