திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் தலைமையிலான மதுவிலக்கு காவல் துறையினர், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரணி தாலுகா ஒட்டம்பட்டு பகுதியில் 400 லிட்டர் கள்ளச் சாராய ஊறல், அரசாணி பாளையம் பகுதியில் 150 லிட்டர் சாராயம் ஊறல், வசந்தபுரம் பகுதியில் 950 லிட்டர் கள்ளச் சாராய ஊறல், செங்கம் தாலுக்கா வலையாம்பட்டு பகுதியில் 200 லிட்டர் சாராய ஊறல், ஜமுனாமரத்தூர் பகுதியில் 400 லிட்டர் சாராய ஊறல் என மொத்தம் 2430 லிட்டர் சாராய ஊறல்களும், விற்பனைக்காக வைத்திருந்த 1110 லிட்டர் கள்ளச் சாராயமும் கைப்பற்றி அழிக்கப்பட்டது.