தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கையில் பாரபட்சம்: மறு எண்ணிக்கை நடத்தக்கோரி மனு - Vote Recounting Issue

திருவண்ணாமல: ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக்கூறி மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை வாக்கு எண்ணும் பிரச்சனை மறு வாக்கு எண்ணிக்கை நடத்தொ கோரி மனு திருவண்ணாமலை தேர்தல் பிரச்சனை Vote Recounting Issue
Thiruvannaamalai Vote Recounting Issue

By

Published : Jan 5, 2020, 11:38 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் சீட்டம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் காவல்காரன் என்பவர் போட்டியிட்டார். ஜனவரி 2ஆம் தேதி வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதில், காவல்காரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 631 வாக்குகளும் எதிரணியினர் 632 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காவல்காரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வாக்கு எண்ணும் அலுவலர் ஆட்டோ சின்னத்தில் விழுந்த இரண்டு வாக்குச்சீட்டில் மை இருந்தபோதிலும் எதிர்த்தரப்பினர் கூச்சல் குழப்பம் போட்டு அலுவலர்களை மிரட்டி அந்த வாக்குச்சீட்டுகளை செல்லாத வாக்குகளாக அறிவிக்கக் கோரி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், வாக்கு எண்ணும் அலுவலர் அந்த வாக்குகளை செல்லாது என வாக்குப் பெட்டியில் போட்டுவிட்டார். எனவே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிக்கைவைக்கப்பட்டது. ஆனால், அதற்கு அலுவலர் செவிசாய்க்காமல் எதிரணி வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவித்தார்" எனத் தெரிவித்தார்.

மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி மனு அளித்த வேட்பாளர்

வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்படாமல், அஞ்சல் வாக்குகளையும் யாரும் இல்லாதபோது எண்ணிவிட்டு, முடிவை அறிவித்த காரணத்தால் மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமியிடம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

இதையும் படிங்க:

‘பணம் வாங்குனியே... ஓட்டு போட்டியா’ - வாக்காளர்கள் மீது கோபித்துக்கொண்ட வேட்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details