திருவண்ணாமலை மாவட்டம் நரியாப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை புதிதாக திறக்கப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "நரியாப்பட்டு ஊராட்சியிலிருந்து ஏராளமான ஆண் மற்றும் பெண் மாணவர்கள் தச்சம்பட்டு கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு டாஸ்மாக் கடை அமைய இருக்கும் வழியாக செல்கின்றார். அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், டாஸ்மாக் கடைகள் இருக்கும் பகுதியின் அருகில்தான் உள்ளது.
மேலும் அம்மச்சார் அம்மன் கோயில் செல்வதற்கு டாஸ்மாக் கடை அமையவிருக்கும் வழியாகத்தான் பெண்களும் ஆண்களும் செல்கிறோம்.