ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல், கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வந்தன.
ஏப்ரல் 4ஆம் தேதி (நேற்று) முதல் 50 சதவீதம் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில், திருவண்ணாமலை நகரில் நேற்று பொதுமக்கள் கூட்டம் மற்ற நாட்களைக் காட்டிலும் அதிகரித்துக் காணப்பட்டது.
குறிப்பாக, வைரஸின் தீவிரம் அறியாமல் முதியோர்கள் வங்கிகள் முன்பு அலைமோதிய காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதிலும், திருவண்ணாமலை நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு குவிந்த முதியோர்கள் கூட்டம் பார்ப்பவரை திடுக்கிட வைத்தது.