தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர் மேலாண்மை பணி: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு - மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை: ஜல்சக்தி அபியான் எனப்படும் நீர் ஆற்றல் துறையின் நீர் மேலாண்மை இயக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

collector

By

Published : Aug 3, 2019, 11:40 AM IST

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள பெரிய ஏரி, எடப்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரியை தன்னார்வலர்கள் தூர்வாரி புனரமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார். பின் செய்யாலேரி கிராமத்தில் விவசாயி ஒருவர் மணிலா பயிரில் மழைத் தூவான் கருவியின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார்.

மேலும் செல்லங்குப்பம் கிராம ஊராட்சியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் இடையே அமைக்கப்பட்டுள்ள நீர்க்குழி பாத்திகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் நீர் ஆற்றல் துறையின் நீர் மேலாண்மை இயக்கப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு மானியத்துடன் கூடிய நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் தூவான் கருவிகள் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானிய விலையிலும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானிய விலையிலும் கருவிகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details