திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவுப்படி, அனைத்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில், டெல்டா தனிப்பிரிவு காவல் துறையினர் இணைந்து இன்று ராயண்டபுரம், அல்லியந்தல், குருமபட்டி, அன்னந்தல், தோக்கவாடி பகுதியில் மது விலக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அல்லியந்தல் பகுதியில் 450 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், தோக்கவாடி பகுதியில் ஆயிரத்து 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், டி.கிருஷ்ணாபுரம் பகுதியில் 10 லிட்டர் கள் அழிக்கப்பட்டது.
மேலும், அன்னந்தல் பகுதியில் 60 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வைத்திருந்த முனியன், ஆறுமுகம், சங்கர், குமார், தெய்வானை ஆகியோரையும், வெங்கட்டம்பாளையம் பகுதியில் 65 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காகக் கடத்தி வைத்திருந்த வெங்கடேசன், ஐயப்பன் ஆகியோரையும், ராயண்டபுரம் பகுதியில் 55 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த முருகன், அன்பழகன், உள்ளிட்ட ஒன்பது நபர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.