திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டம் ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி தர்ஷினி, 150 திருக்குறளை 289 வினாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
150 திருக்குறளை 289 வினாடிகளில் ஒப்புவித்த 3ஆம் வகுப்பு மாணவி
திருவண்ணாமலை: 150 திருக்குறளை 289 வினாடிகளில் ஒப்புவித்து மூன்றாம் வகுப்பு மாணவி தர்ஷினி உலக சாதனை படைத்துள்ளார்.
இதை அங்கீகரிக்கும் வகையில் 'Triumph World Records' நிறுவனம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், 150 திருக்குறளையும் தெளிவாக உச்சரித்து சாதனை புரிந்தமைக்காகமாணவி தர்ஷினிக்கு,பதக்கம், கேடயம், தங்கச் சங்கிலி ஆகியோவைபரிசாக வழங்கி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பாராட்டு தெரிவித்தார்.
இதையடுத்து, மாணவியின் ஏழ்மை நிலையை அறிந்த ஆட்சியர், காவேரிப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாணவியின் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.