தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருட வந்த வீட்டில் மது அருந்தி ஃபன் பண்ண பாய்ஸ்! - திருவண்ணாமலை மாவட்டத்தில் திருடவந்த வீட்டில் மது அறுந்தி ஃபன் பன்ன பாய்ஸ்

திருவண்ணாமலை: ஆண்டாபட்டு கிராமத்தில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், அங்கு பணம் கிடைக்காததால், உணவு சமைத்து, மது அருந்தி ஜாலியாக இருந்துள்ளனர்.

திருடவந்த வீட்டில் மது அருந்தி ஃபன் பன்ன பாய்ஸ்
திருடவந்த வீட்டில் மது அருந்தி ஃபன் பன்ன பாய்ஸ்

By

Published : Apr 21, 2020, 4:49 PM IST


திருவண்ணாமலை அடுத்த ஆண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் குமார். இவரது மனைவி அஜந்தா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தன் மனைவியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட குமார், வீட்டைப் பூட்டிவிட்டு குழந்தைகளுடன் சொந்த ஊரான ஆனந்தபுரத்திற்குச் சென்றுவிடுமாறு கூறியுள்ளார்.

அதன்படி கடந்த 15 நாள்களுக்கு முன்பு அஜந்தா வீட்டை பூட்டிவிட்டு, குழந்தைகளுடன் சென்றுவிட்டார். அதன் பின்னர் இன்று ஆனந்தபுரத்திலிருந்து வீடு திரும்பிய அஜந்தா, வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும், அறைகளில் துணிமணிகள் கலைந்திருந்தது. ஆனால், எந்த பொருளும் திருடு போகவில்லை. பின்னர், சமையலறைக்குச் சென்று பார்த்தபோது, திருடர்கள் வீட்டிலிருந்த மளிகைப் பொருள்களை வைத்து, பல்வேறு விதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டுவிட்டு வீட்டினுள் அமர்ந்து மது அருந்தியது தெரியவந்தது.

வீட்டை சோதனையிடும் காவல் துறையினர்
இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் அஜந்தா புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அஜந்தா வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். குற்றவாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்த காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து அவர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details