திருவண்ணாமலைஅருகே வந்தவாசி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்குவதை முறைப்படுத்த வலியுறுத்தியும்; ரேஷன் கடையில் பொருட்கள் சரிவர வழங்காததைக் கண்டித்தும் கிராமப்பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதை முறைப்படுத்த வேண்டும் மற்றும் ரேஷன் கடையில் பொருட்களை முறையாக வழங்க வேண்டும் என்று கூறி வந்தவாசி - ஆரணி நெடுஞ்சாலையில் உள்ள தெள்ளூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.