திருவண்ணாமலை:வேங்கிகால் பகுதியில் அதிக நடமாட்டம் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் கஞ்சா போதையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து தங்க செயின் பறிக்க முயன்றார்.
அந்தப் பெண் கழுத்தில் இருந்த செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு சத்தம் போட்டதால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் இளைஞரை துரத்தி பிடித்து சாலையோரத்தில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து சரமரியாக அடித்து உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞரை காவல் துறையினர் காவல் நிலையத்தில் மாலை 6 மணிக்கு மேல் குற்றவாளிகளை தங்க வைக்க கூடாது என்பதற்காக வழக்குப்பதிவு ஏதும் செய்யாமல் இளைஞரின் சுய விபரங்கள் ஏதும் பதிவிடாமல் அனுப்பி வைத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருள்களை அறவே ஒழிக்கும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயின் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: செய்தியாளர்களை ‘கெட் அவுட்’ என கூறிய ஹெச்.ராஜா - செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு