திருவண்ணாமலை:கார்ணாம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். அவருடைய சொந்த பணிக்காக டிராக்டர் எடுத்து சென்றுவிட்டு பின்னர் பணி முடித்து ஊராட்சி மன்றத்தலைவர் பாபு என்பவரது வீட்டின் அருகே நிறுத்தியுள்ளார். அப்போது அருகே இருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிராக்டர் ஓட்டி வந்த பூவரசன் கிணற்றின் உள்ளே இருந்த மோட்டார் கயிறு பிடித்து வெளியே ஏறினார். ஆனால், அவருடன் அமர்ந்திருந்த குமரன் என்பவர் கிணற்றில் மூழ்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.