திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (33). கிருஷ்ணவேணி தன்னுடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்த நபரைக் கொலைசெய்துள்ளார்.
திருமணத்தை மீறிய உறவிலிருந்த நபர் கொலை; பெண் மீது பாய்ந்த குண்டர் சட்டம் - தமிழ் குற்ற செய்திகள்
திருவண்ணாமலை: ஆரணி அருகே தன்னுடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்த நபரைக் கொலைசெய்த பெண் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
![திருமணத்தை மீறிய உறவிலிருந்த நபர் கொலை; பெண் மீது பாய்ந்த குண்டர் சட்டம் The thug act on the woman who murdered a man who was in a relationship with her](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:37:26:1593871646-tn-tvm-02-women-goondas-script-7203277-04072020192631-0407f-1593870991-421.jpg)
இதையடுத்து கொலைசெய்த குற்றத்துக்காக ஆரணி நகரக் காவல் துறையினர், கிருஷ்ணவேணியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரின் சட்டவிரோதச் செயலைக் கட்டுப்படுத்த வேண்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி அவரைக் கைதுசெய்து வேலூர் மத்திய சிறையில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த ஆண்டில் மட்டும் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த 61 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.