திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜா. இவர் அசோக் நகர் 1-ஆவது தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் (ஏப். 8) ராஜாவின் மனைவி சந்தைக்குச் சென்று, மளிகைப் பொருள்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
முகக்கவசம் அணிந்து கொள்ளை
அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, பின் தொடர்ந்து வந்த செயின் பறிப்புக் கொள்ளையன், அக்கம் பக்கம் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு பின்னர், முகக் கவசம் அணிந்து கொண்டு அவரைப்பின்தொடர்ந்துள்ளான்.
அப்போது, அந்த அடையாளம் தெரியாத நபர் ராஜாவுடைய மனைவி கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க சங்கிலியை, பறித்துக்கொண்டு சென்றான்.
இதையடுத்து ராஜாவின் மனைவி, கொள்ளையனை பிடிக்க முயன்ற போது, கொள்ளையன் மின்னல் வேகத்தில் ஓடி அங்கிருந்து, தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றான்.