திருவண்ணாமலை: செங்கம் அடுத்த கவுண்டனூர் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளான மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் சூழல் உள்ளது. இதனால், தங்களுக்கு தார் சாலை அமைத்து தர வேண்டுமென பல ஆண்டுகளாக அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை அரசு ஒப்பந்ததாரர் துவங்கி வைத்துள்ளார். கூட்ரோடு பகுதியில் இருந்து குட்டூர் கிராமம் வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டது.
ஒரே நாளில் முடிக்கப்பட்ட தார் சாலை தரமற்ற வகையில் உள்ளதாகவும், இதுதொடர்பாக புகார் அளித்தும் வட்டாரா வளர்ச்சி அலுவலர்கள், நெடுஞ்சாலைத் துறையினர் யாரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.