திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 அரசு 108 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டுவரும் நிலையில் மேலும் புதியதாக 2 ஆம்புலன்ஸ் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய சேவையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
வருகின்ற செப். 9ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவும் வருகைதரவுள்ளார்.