திருவண்ணாமலை : பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்கியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
கரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாடவீதிகளில் நடைபெறாமல் இருந்த கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.