திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்கியளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும் அண்ணாமலையார் திருக்கோவிலில் முக்கிய திருவிழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடந்து காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகளின் மாட வீதி உலா நடைபெற்று வரும் நிலையில் முக்கிய திருவிழாவான விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகியோரின் பஞ்ச மூர்த்தி மகா ரத தேரோட்டம் டிசம்பர் 3-ம் தேதி திருநாளில் நடைபெற உள்ளது.