திருவண்ணாமலை மாவட்டம்சண்முகா தொழிற்சாலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 80 பேரும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 120 பேரும் பயின்று வருகின்றனர். இதில் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆன்லைன் தேர்வுக்கு பயிற்சி செய்ய ஏதுவாகவும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பில் கலந்து கொள்ளவும் 63 மாணவ, மாணவிகளுக்கு டேப்லெட்கள் பயன்படுத்தி வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தனது சொந்த செலவில் 30 டேப்லெட்கள் வாங்கி மாணவ மாணவிகளுக்கு இன்று(அக்.14) வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சொந்த செலவில் மாணவர்களுக்கு 30 டேப்லெட்கள் வழங்கல் - முருகேஷ் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு டேப்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தனது சொந்த செலவில் 30 டேப்லெட்களை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சொந்த செலவில் மாணவர்களுக்கு 30 டேப்லெட்கள் வழங்குதல்...
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு செய்யப்பட்ட வரும் அடிப்படை வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க:குன்னூரில் பள்ளி மைதானத்தில் கரடி புகுந்ததால் பரபரப்பு!
TAGGED:
thirty tablets