திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்டது காயிதேமில்லத் தெரு. இந்த தெருவின் மத்தியில் உள்ள சிறுபாலம் சேதமடைந்து தெருவின் குறுக்கே திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. இந்தப் பள்ளம் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்யாமல் உள்ளது.
காயிதேமில்லத் தெருவிற்கு அருகே 200 மீட்டர் தொலைவில் சேத்துப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் மாணவியர் விடுதி, ஆசிரியர் பயிற்றுநர் அலுவலகம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் பள்ளி விடுதிக்கு மிதிவண்டிகளில் அல்லது நடந்து செல்லும் மாணவ மாணவிகள், அடிக்கடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுவதாகத் தெரிகிறது.