திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தியாகி அண்ணாமலை மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் இன்று(ஜூலை 15) முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா! - தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை
திருவண்ணாமலை: மாவட்டத்திலுள்ள 391 பள்ளிகளைச் சேர்ந்த 21,894 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும்; 26,724 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குமான பாடப் புத்தகங்களை மாவட்ட கல்வி அலுவலர் மாணவர்களுக்கு வழங்கினார்.
இதில் மாவட்டத்திலுள்ள 391 பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும், 12ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் இன்று (ஜூலை 15)முதல் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருட்செல்வன் பாடப் புத்தகங்களை வழங்கினார்.
இந்த பாடப் புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மூலம் (TACTV) தொலைக்காட்சியில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைப் பார்த்து, தங்களது படிப்பை தொடங்குவதற்கு ஏதுவாக அமையும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.