தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் வேதனை: சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்

திருவண்ணாமலை: ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழால் வாழ்வாதாரத்திற்கு எந்த வழிவகையும் அரசு செய்யவில்லை, என்று கூறி தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டம்
போராட்டம்

By

Published : Sep 9, 2020, 12:38 PM IST

ஆசிரியர் தகுதித் தேர்வால் பெறப்பட்ட சான்றிதழால் 7 ஆண்டுகளில் தங்களது வாழ்வாதாரத்திற்கு எந்த வழிவகையும் அரசு செய்யவில்லை என்று கூறி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சான்றிதழ்களைத் திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசால் 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆறு ஆண்டுகளாக எந்தவித பணி நியமனமும் வழங்கப்படவில்லை.

2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்ததற்காக அளிக்கப்பட்ட சான்றிதழால் எங்களுக்கு எந்தவித பலனும் இல்லை என்று தேர்ச்சி பெற்றவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யாத ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற சான்றிதழ் தங்களுக்குத் தேவையில்லை என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களதுச சான்றிதழ்களைத் திருப்பி அளித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details