தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது! - பாலியல் வன்கொடுமை

திருவண்ணாமலை: ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Teacher who sexually harass 5 std children arrested

By

Published : Nov 6, 2019, 11:38 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் அத்திபாடி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் செல்ஃபோனில் ஆபாசப் படம் காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மதலைமுத்து என்பவரை வாணாபுரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்துள்ள அத்திபாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 14 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதியதாக பணி மாறுதலில் வந்தவர் ஆசிரியர் மதலைமுத்து. இவர் இப்பள்ளியில் பணிக்கு சேர்ந்த ஒரு வார காலத்தில் மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவிகள் 5 பேரிடம் கழிவறையில் அரை நிர்வாணமாக நின்றுகொண்டு மாணவிகளை தண்ணீர் எடுத்து வரச்சொல்லி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வது. மேலும் செல்ஃபோனில் ஆபாசப் படம் காட்டி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார் மதலைமுத்து. ஆசிரியரின் செயலை பெற்றோரிடம் தெரிவித்து மாணவ மாணவிகள் நாங்கள் இனி பள்ளிக்கு போகமாட்டோம் என்று கூறியுள்ளனர். அப்போது பள்ளிக்குச் சென்ற பெற்றோர்கள், ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். தகவலறிந்த வானாபுரம் போலீசார் ஆசிரியர் மதலைமுத்துவை பிடித்து கைதுசெய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்ற ஆசிரியர்களை அரசு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details