தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 ஆண்டுகளாக போலீஸூக்கு தண்ணீ காட்டிய டீக்கடைக்காரர் - Sand Theft In Thiruvannamalai'

திருவண்ணாமலை: டிஎஸ்பி அலுவலகம் அருகே டீக்கடை வைத்து, காவலர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து ஐந்து ஆண்டுகளாக மணல் கடத்தலில் ஈடுபட்ட டீக்கடைக்காரரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

போலீஸில் சிக்காமல் 5 ஆண்டுகளாக மணல் கடத்திய டீக்கடைக்காரர்  மணல் கடத்திய டீக்கடைக்காரர்  மணல் கடத்தல்  திருவண்ணாமலை மணல் கடத்தல்  Sand Theft  Sand Theft In Thiruvannamalai'  Tea shopkeeper who smuggled sand for 5 years without getting caught by the police
Sand Theft In Thiruvannamalai'

By

Published : Mar 11, 2021, 7:44 PM IST

திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி. அசோக்குமார் தலைமையிலான காவலர்கள், நேற்று (மார்ச்.10) இரவு போளூர் பகுதியில் உள்ள சனிக்கவாடி - செய்யாறு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த மினி லாரியை காவல் துறையினர் மடக்கி பிடித்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தென்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சண்முகம் (36) என்பதும், லாரி உரிமையாளர் போளூர் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் டீக்கடை நடத்தி வரும் ஏழுமலை என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து, இவரது டீக்கடைக்கு வரும் காவலர்களுடன் நல்ல நட்புறவை ஏற்பட்டுத்தி கொண்டு, அவர்களின் கண்காணிப்பு பணிகளையும் அறிந்து கொண்டுயாரிடமும் சிக்காமல்கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு மினி லாரிகளில் அவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் காவல் துறையினருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள ஏழுமலையை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆற்று மணல் திருடிய 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details