திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி ஆகியோர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.
கரும்பு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய நடவடிக்கை; தோப்பு வெங்கடாச்சலம் - thiruvannamalai district news
திருவண்ணாமலை: கரும்பு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
இதில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள யாத்ரி நிவாஸ் கட்டட பணிகள், வேளாண்மைத் துறை சார்பில் பாலிஹவுஸ் முறையில் சம்மங்கி பூ சாகுபடி செய்யும் விவசாயியிடம் அரசு சார்பில் வழங்கப்பட்ட மானியப் பணிகள், கீழ்கட்சிராப்பட்டு பகுதியில் சொட்டுநீர் பாசன முறையில் கரும்பு சாகுபடி பணிகள் குறித்து மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் தமிழ்நாடு அரசு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி தன்னிறைவு பெற்றிருப்பதாகவும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் கிரிஷ் கர்மான் விருது பெற்றுவருவதாகவும் இந்தாண்டு கரும்பு உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.