அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஊதியத்தை போலவே, தமிழ்நாடு அரசும் வழங்க வேண்டுமென, திருவண்ணாமலை அரசு மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவ சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு, மருத்துவ சங்கத்தின் வருங்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை இதையும் படிங்க:
தவறான சிகிச்சையால் கேட்புத்திறன் இழந்த பெண்: மருத்துவ இயக்குநர் பதிலளிக்க உத்தரவு