திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த ராந்தம் கிராமத்தில் விவசாய நிலத்தின் அருகே கட்டிவைத்திருந்த பசுக்கன்றை அடையாளம் தெரியாத விலங்கு கடித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் அந்தக் கிராமத்தில் நடைபெறாததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். உடல் சிதறிய நிலையில், உயிரிழந்து கிடந்த பசுக்கன்றை பார்த்த அதன் உரிமையாளர் காந்தி மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.