தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய கடைகளுக்குச் சீல் வைத்த காவல் கண்காணிப்பாளர்

திருவண்ணாமலை: தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட நகைக் கடைகள், எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீல் வைத்தார்.

கடைகளுக்கு சீல் வைத்த காவல்துறையினர்
கடைகளுக்கு சீல் வைத்த காவல்துறையினர்

By

Published : Jun 16, 2020, 2:57 AM IST

திருவண்ணாமலை நகரில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை நகரின் தேரடி வீதியில் உள்ள நகைக் கடைகளான சாந்தி ஜுவல்லர்ஸ், காமதேனு ஜுவல்லர்ஸ் ஆகிய இரண்டு நகைக் கடைகள், மோத்தி வணிக வளாகத்தில் உள்ள 20 எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்யும் கடைகள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்டு வந்தது.

இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நேரில் சென்று, கடைகளை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார். அவருடன் நகராட்சி ஆணையாளர் உடனிருந்தார்.

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தக் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த எலக்ட்ரானிக் வணிக நிறுவனங்கள், நகைக் கடைகளிலும் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல், வாடிக்கையாளர்களைக் கூட்டமாக, முகக் கவசம் அணியாமல் உள்ளே அனுமதித்து, கூட்டம் சேர்த்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details