தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜூன் 15,16 ஆம் தேதிகளில் கோடை விழா! - june 15

திருவண்ணாமலை: ஜவ்வாது மலையில் நடைபெறும் 2019ஆம் ஆண்டிற்கான கோடை விழா ஜூன் 15, 16ஆம் தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

By

Published : Jun 1, 2019, 9:38 AM IST

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஜவ்வாதுமலை கோடை விழா ஏற்பாடுகள் சம்பந்தமான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஜூன் 15,16 ஆம் தேதிகளில் கோடை விழா - மாவட்ட ஆட்சியர்

அப்பொழுது, பல்துறை அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், சிறப்பான முறையில் ஜவ்வாதுமலை கோடை விழா நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவர் அனைத்து துறை அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details