தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதட்சணை கொடுமை: திருவண்ணாமலையில் பெண் தீக்குளிக்க முயற்சி - கைக்குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை: வரதட்சணை கொடுமை செய்வதாகக் கூறி, கைக்குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

suicide_attempt

By

Published : Nov 19, 2019, 10:20 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் மனைவி கனிமொழி. இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு திருமணம் ஆனதாகவும் தமிழ்வாணன், அவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு கனிமொழி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், "திருமணமாகி மூன்று வருடத்திற்கு மேலாகிறது. பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக குழந்தையின் தந்தை குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை.

அனைத்து பொருள்களும் தாய் வீட்டிலிருந்துதான் கொடுக்கப்படுகின்றன. 17 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது, அதை விற்று வீடு கட்டிக்கொண்டு கடை வைப்பதற்கு, கார் வாங்குவதற்கு ஒரு லட்சம் வேண்டும் என்று அடித்து அனுப்பினார். அனைத்தையும் எனது தாய் வீட்டிலிருந்து செய்துகொடுத்தனர்.

பெண்ணின் தாய் இது குறித்து செய்தியாளரிடம் கூறுகையில்

இருந்தாலும் கணவர் வரதட்சணை கேட்டு மீண்டும் அடித்து உதைத்தார். இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்தும், காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்துள்ளோம். இங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் இங்கேயே தற்கொலை செய்துகொள்வோம்" என்றார்

இதையும் படிங்க:

பட்டா வழங்கக்கோரி ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் மனு

ABOUT THE AUTHOR

...view details