தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: செங்கம் அருகே 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடி போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கபடி வீராங்கனைகள் தங்களது திறனை வெளிப்படுத்தினர்.

State level women's kabaddi competition !
State level women's kabaddi competition !

By

Published : Oct 18, 2020, 2:51 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதிய குயிலம் பகுதியில் 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபாடி போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஈரோடு, கோவை, திருப்பத்தூர், குடியாத்தம், காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி குழுவினர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய திருப்பத்தூர் அணி முதல் பரிசையும், காரப்பட்டு அணி இரண்டாம் பரிசையும், கரூர் மற்றும் காஞ்சிபுரம் அணிகள் மூன்று மற்றும் நான்காம் பரிசுகளைத் தட்டி சென்றது.

தி.மலையில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி

போட்டி முடிவுக்கு பின் பேசிய கபடி வீராங்கனைகள், இதுபோன்று பெண்களுக்கான கபடி போட்டிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கொடைக்கான‌லில் ப‌லா ப‌ழ‌ம் விளைச்ச‌ல் அமோகம்!

ABOUT THE AUTHOR

...view details