தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் தரிசன டிக்கெட் வழங்குவதில் மோசடி - ஊழியர்கள் சஸ்பெண்ட்! - தரிசன டிக்கெட் வழங்குவதில் மோசடி செய்த ஊழியர்கள் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயிலில் தரிசன டிக்கெட் வழங்குவதில் மோசடி செய்த இரண்டு ஊழியர்களை கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

By

Published : Nov 9, 2019, 7:11 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சம்பந்த விநாயகர் சன்னதி அருகில் உள்ள கவுன்ட்டரில் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் வேறு பணிக்கு செல்லும் போது தற்காலிக ஊழியர்கள் தரிசன டிக்கெட் வழங்குவது வழக்கம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

கோயில் யானை ’ருக்கு’ இறந்துவிட்டதால் அதை பராமரித்து வந்த சிங்காரம் மற்றும் இரவு காவலாளி பிரேம்குமார் ஆகியோர் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் பக்தர்கள் செல்லும் வரிசையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டண தரிசனத்தில் நின்ற பக்தர்கள் சிலரிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது தரிசனத்திற்காக 50 ரூபாய் செலுத்தியதாகவும் ஊழியர்கள்தான் டிக்கெட் தரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக ஊழியர்கள் சிங்காரம், பிரேம்குமார் ஆகியோர் சில பக்தர்களுக்கு மட்டும் தரிசன டிக்கெட் கொடுத்துவிட்டு பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்காமல் தரிசனத்திற்கு அனுமதித்தது உறுதியானதையடுத்து ஆணையர் ஞானசேகரன் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்க:

சிலை கடத்தல் வழக்கு: இரண்டு அமைச்சர்கள் பெயரை பொன் மாணிக்கவேல் வெளியிட கோரிக்கை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details