ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலை உள்ள இடங்களில் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாகும்.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் நேரில் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாமல் தவித்துவருகின்றனர். மேலும் அரசாங்கத்தின் உத்தரவை மீறி திருவண்ணாமலை நகரில் உள்ள அய்யங்குளத்தில் அமாவாசை தினமான இன்று மறைந்த முன்னோர்களுக்கு ஒரு சில பேர் வந்து தர்ப்பணம் கொடுத்துச் சென்றனர்.