திருவண்ணாமலை கோபால பிள்ளையார் கோவில் தெருவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருக்கோயில் ஸ்ரீ கோபால விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து, தற்பொழுது உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸிலிருந்து பொது மக்களை காக்க சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தில் பஞ்சகவ்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பாலபிஷேகம், ஸ்நபன அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.