திருவண்ணாமலை:கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் அமைத்து அன்னபூரணி அரசு அம்மா பொதுமக்களுக்கு ஆன்மிக சொற்பொழிவை வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையினை முன்னிட்டு இன்று (ஆக-14) அன்னபூரணி, பக்தர்கள் அம்மன் வடிவத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக சூலம், கிரீடம் அணிந்து அம்மன் வேடத்தில் சிறப்புத்தரிசனம் அளித்து அதிர்ச்சி கொடுத்தார்.
தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் எனக்கூறி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த அன்னபூரணி அரசு இதைத்தொடர்ந்து யூ-ட்யூப்பில் ஆன்மிக சொற்பொழிவை நடத்தி வந்தார். இந்நிலையில் கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் அமைத்து அங்கு குடும்பம் சார்ந்த பிரச்னை, மனப்பிரச்னை, வாழ்வாதாரப் பிரச்னை, திருமணத்தடை, குழந்தைப்பிரச்னை உள்ளிட்டவை நீங்க ஆசிவழங்குவதாக விளம்பரப்படுத்தி, பக்தர்களுக்கு அம்மன் வேடத்தில் ஆன்மிக சிறப்பு தரிசனம் தந்தார், அன்னபூரணி அரசு.