தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் - Thiruvannamalai Collector Inspection

திருவண்ணாமலை: புதிய வாக்காளர்களுக்கு இ-எபிக் (e -EPIC) வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்
வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்

By

Published : Mar 14, 2021, 12:04 PM IST

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட, வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று நடைபெற்ற புதிய வாக்காளர்களுக்கு இ-எபிக் (e -EPIC) வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு செய்து, புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் 2021ஐ முன்னிட்டு , கடந்த 20.01.2021 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 55 ஆயிரத்து 737 வாக்காளர்களுக்கு (ஆண்கள் -25,289, பெண்கள் -30,426, மூன்றாம் பாலினத்தவர்-22) நேற்று(ஏப்ரல்13) தொடங்கி இன்று (ஏப்ரல்14) இரு தினங்களில் இ-எபிக் வாக்காளர் அடையாள அட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 4ஆம் தேதி வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்கான (Randomization) சுழற்சி முறை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே. ஆர்த்தி, தேர்தல் வட்டாட்சியர் தியாகராஜன் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:5 ஆண்டுகளாக போலீஸூக்கு தண்ணீ காட்டிய டீக்கடைக்காரர்

ABOUT THE AUTHOR

...view details