தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்! - Thriuvannamalai temple issue

தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் தை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
அண்ணாமலையார் கோயிலில் தை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

By

Published : Feb 4, 2023, 7:14 AM IST

அண்ணாமலையார் கோயிலில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்!

திருவண்ணாமலை: தை மாத பிரதோஷ தினமான நேற்று பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றினால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து கனகாம்பரம், மல்லி, வில்வ இலை, சாமந்திப்பூ உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ தினத்தில் நந்தி பகவானை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்றும், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

இதையும் படிங்க: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு

ABOUT THE AUTHOR

...view details