தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமனாரை கொலை செய்த மருமகன் கைது! - மாமனார் கொலை

திருவண்ணாமலையில் குடும்ப விவகாரம் காரணமாக மாமனாரை கொலை செய்த மருமகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

மாமனாரை கொலை செய்த மருமகன் கைது
மாமனாரை கொலை செய்த மருமகன் கைது

By

Published : Sep 26, 2020, 8:21 PM IST

திருவண்ணாமலை: செங்கம் அருகே குடும்ப விவகாரம் காரணமாக மாமனாரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மருமகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நட்ராஜ். இவர் கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், திருவண்ணாமலை டி.எஸ்.பி. சரவணகுமரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர்.

இந்நிலையில் உறவினர்களிடையே விசாரணை செய்தபோது, விவசாயி நட்ராஜின் மருமகன் விக்னேஷ் என்கிற ஜெயசந்திரன் முன்னுக்குப் பின் முறனாக பதில் கூறியுள்ளார். மேலும், நட்ராஜ் செல்ஃபோனுக்கு வந்த கடைசி அழைப்பின் எண்ணை வைத்தும் விக்னேஷ் மீது சந்தேகமடைந்த செங்கம் காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், நட்ராஜ் என்பவருக்கு சீனுவாசன், மோகன்ராஜ் என்ற இரண்டு மகன்கள், பிரபாவதி என்ற மகள் உள்ளனர். மேலும், தனது மகளை அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற ஜெயசந்திரனுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துவைத்தனர்.

இந்நிலையில், பிரபாவதிக்கும், விக்னேஷுக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக, நட்ராஜ் தனது மகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து நெடுநாட்களாக வீட்டிலேயே வைத்திருந்துள்ளார். இதனால், தனது மாமனார் நட்ராஜ் மீது ஏற்கனவே கடுங்கோபத்திலிருந்த விக்னேஷ், கொலை நடந்த அன்று மது அருந்த தனது மாமனாரை செல்ஃபோன் மூலம் அழைத்துள்ளார்.

பின்னர், மது அருந்தும் இடத்தில் மாமனார், மருமகனுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போதை தலைக்கேறியதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, விக்னேஷை கைது செய்த காவல் துறையினர், கொலை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் குடிபோதையில் இருந்த ரவுடி படுகொலை

ABOUT THE AUTHOR

...view details