திருவண்ணாமலை, தென்றல் நகரிலுள்ள ராணுவ வீரர்களுக்கான சிறப்பு அங்காடியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று விற்பனை தொடங்கியது. இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் கூட்டமாகக் கூடி, பொருட்களை வாங்குவதற்கு முயற்சித்தனர்.
இதனிடையே, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காத ராணுவ வீரர்களை உயர் அலுவலர் இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தினார். ராணுவ வீரர்கள் தங்கள் கைகளை கழுவிய பின்னரே, மதுப்பாட்டில்களை வாங்க வேண்டும் என்று கூறி அனைவரையும் முறைப்படுத்தினார்.
நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களே தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாக மதுப்பாட்டில்களை வாங்குவது தவறான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது. இது கரோனா சமூகப் பரவலை உண்டாக்கிவிடும் என அஞ்சப்படுகிறது.
ஆர்மி கேன்டீனில் மது விற்பனை - தகுந்த இடைவெளியை மறந்த தேசப் பாதுகாவலர்கள்! - தேசப் பாதுகாவலர் மறந்த தகுந்த இடைவெளி
திருவண்ணாமலை: வெகுநாள்களுக்குப் பிறகு திறந்த, ராணுவ வீரர்களின் கேன்டீனில் ராணுவ வீரர்கள் முண்டியடித்துக் கொண்டு மதுவை வாங்கினர்.
ஆர்மி கேண்டீனில் மது விற்பனை... தகுந்த இடைவெளியை மறந்த தேச பாதுகாவலர்கள்!
இதையும் படிங்க:ஏற்காட்டில் பூந்தொட்டிகள் மூலம் கரோனா விழிப்புணர்வு வாசகம்