திருவண்ணாமலை:கல்லப்பாடி புதூர் கிராமத்தில் பூச்சி என்ற மூதாட்டி உயிரிழந்தார். இந்த துக்க நிகழ்வுக்கு பெரிய கல்லப்பாடி மற்றும் கொடுக்கப்பட்டு, பேராயம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து சித்ரா மற்றும் இந்திரா ஆகியோர் வெரையூர் சென்றுள்ளனர். இருபெண்களையும் அவ்வழியாக வந்த கள்ளப்பாடிபுதூரை சேர்ந்த உறவினர் விக்னேஷ் என்ற இளைஞர் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
வெறையூர் - திருக்கோவிலூர் சாலையில் பைக் சென்றபோது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ்(22), இந்திரா(44), சித்ரா(24) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வெறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.