திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 25ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,422ஆக இருந்தது. அதை்தொடர்ந்து நேற்று (ஜூன் 26) புதிதாக 70 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூருவிலிருந்து வந்த நான்கு பேருக்கும், சென்னையிலிருந்து வந்த ஒன்பது பேருக்கும், ராணிப்பேட்டையிலிருந்து வந்த ஐந்து பேருக்கும், புறநோயாளிகள் பிரிவில் இருந்த 19 பேருக்கும் என மொத்தம் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.