தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்' - கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு - சொரகுளத்தூர் பகுதி மக்கள்

திருவண்ணாமலை: சொரகுளத்தூர் சேரியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கூறி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சிரியரிடம் மனு அளித்தனர்.

new panchayat protest collectorate tiruvannamalai  serakulathur panchayt election problem people protest in front of district collector office  thiruvannamalai district news  சொரகுளத்தூர் பகுதி மக்கள்  சொரகுளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் பிரச்னை
சொரகுளத்தூர்பகுதி மக்களின் போராட்டம்

By

Published : Jan 21, 2020, 2:37 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரகுளத்தூர் சேரி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் மனு ஒன்றையும் அளித்தனர். அதில், ”நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு கிடைத்தது.

இருப்பினும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர், காதல் திருமணம் செய்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தனது மனைவியை ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வைத்தார். பெரும்பான்மையாக உள்ள மக்களும் அவரைப் வெற்றிபெற வைத்தனர்.

சொரகுளத்தூர்பகுதி மக்களின் போராட்டம்

எனவே, சொரகுளத்தூர் சேரி பகுதியைத் தனிப்பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும். மேலும், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த நபர் திருமணம் செய்த பெண்ணின் வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இதையும் படிங்க: கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details