தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமராமத்துப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட அரசு முதன்மைச் செயலர் - முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் திட்டம்

திருவண்ணாமலை: ஏரிகள் புனரமைப்புப் பணிகள் உள்ளிட்ட குடிமராமத்துப் பணிகளை அரசு முதன்மைச் செயலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

குடிமராமத்து பணிகள் திட்டம்
குடிமராமத்து பணிகள் திட்டம்

By

Published : Oct 17, 2020, 4:20 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் அழகானந்தல், வேறையூர் பெரிய ஏரிகளில் பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பு மூலமாக முதலமைச்சரின் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்தப் புனரமைப்புப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்கள் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி ஜெயசுதா ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வின் முடிவில் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை தீரஜ்குமார் கேட்டுக்கொண்டார். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் வேளாண்மை செய்வதற்கும் தண்ணீர் தேவை நிவர்த்தி அடைவதற்கும் குடிமராமத்துப் பணிகளில் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

அழகானந்தல் ஏரி ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுவருகிறது. ஏரியின் ஆயக்கட்டு 101.35 ஏக்கர், ஏரியின் கரை நீளம் 915 மீட்டர், ஒரு மதகும் 2 கலங்களும் பழுதடைந்து உள்ளதால் தற்போது சீரமைக்கப்பட்டுவருகின்றன.

ஏரியை சுற்றியுள்ள 101.35 ஏக்கர் நிலம் குடிமராமத்துப் பணியின் மூலம் பாசன வசதி பெறும்.

மேலும் வேறையூர் ஏரி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுவருகிறது. ஆயக்கட்டு 120.93 ஏக்கர், கரையின் நீளம் 1,360 மீட்டர், ஏரியில் கரையில் உள்ள புதர்களை அகற்றுதல், மண்ணரிப்புகளை நிரப்பி கரையை பலப்படுத்துதல், கலங்கள் சீரமைத்தல், மதகுகள் புதுப்பித்தல், வரத்துக் கால்வாய் மற்றும் பாசன கால்வாயை சீரமைத்து எதிர்க்கரை அமைத்தல், எல்லைக் கற்கள் நடுதல் ஆகிய பிரதான பணிகள் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அப்பகுதிக்கு உள்பட்ட 120.93 ஹெக்டேர் நிலம் இதன்மூலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details