தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத துணிக் கடைகளுக்கு சீல் - ரெடிமேட் கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலை: தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் வியாபாரம் செய்த மூன்று ஜவுளிக் கடைகளுக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார்.

ஜவுளி கடைகளுக்கு சீல்
ஜவுளி கடைகளுக்கு சீல்

By

Published : Aug 14, 2020, 7:04 PM IST

திருவண்ணாமலை தேரடி வீதியில் பொன்ராஜன், டிசைன்ஸ், ராஜன் பட்டு ஜவுளி மாளிகை ஆகிய மூன்று துணிக் கடைகள் உள்ளன. இந்த பிரசித்தி பெற்ற கடைகளில், துணிகள் எடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.

தற்போது கரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு தங்களின் வியாபாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாடிக்கையாளர்களை அதிக எண்ணிக்கையில் அனுமதித்து முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை சரியாக பின்பற்றாமல் விற்பனை நடைபெறுவதாக திருவண்ணாமலை தாசில்தாருக்கு புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில் நேரடியாக களத்தில் இறங்கிய திருவண்ணாமலை தாசில்தார் அமுலு, பொன்ராஜன் துணிக்கடையில் ஆய்வு செய்து கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் ஜவுளி கடையை பூட்டி சீல் வைத்தார்.

பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக ராஜன் பட்டு ஜவுளி மாளிகை, அதன் அருகே உள்ள ராஜன் டெக்ஸ்டைல், டிசைன் துணிக்கடை ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது கண்டு தாசில்தார் ஜவுளிக் கடைகளை இழுத்து பூட்டி சீல் வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details