தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகள் மனு! - டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு

திருவண்ணாமலை: தனியார் பள்ளி அருகே மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளி  ஆசிரியர்கள், மாணவிகள்  வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

tasmac against

By

Published : Sep 4, 2019, 9:37 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ளது நாயக்கன் பேட்டை. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே தமிழ்நாடு அரசு மதுபானகடை ஒன்று புதிதாக திறக்கப்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுபான கடை திறப்பதற்கு தனியார் பள்ளி மாணவிகளும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவிகள், ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதியை நேரில் சந்தித்தனர்.

அப்போது மாணவிகள் எங்கள் பள்ளி அருகில் மதுபான கடை அமைக்கக் கூடாது என மனு கொடுத்தனர். மேலும், இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details