தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வையிழந்த மாணவிகளுக்கு கண் கண்ணாடி! - tamilnadu lions club

திருவண்ணாமலை: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில் மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் விழா நடைபெற்றது.

minister sevur ramachandran

By

Published : Aug 17, 2019, 11:55 PM IST

தமிழ்நாட்டில் லயன்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண் பார்வையிழந்த மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் 3,500 மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 300 மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details