தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்!

திருவண்ணாமலை: மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் அப்பள்ளியின் தலைமையாசிரியை சசிகலைகுமாரி தலைமையில் நடைபெற்றது.

parents meeting
parents meeting

By

Published : Jan 6, 2021, 12:39 PM IST

கரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, 2020- 2021 கல்வியாண்டுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலன் கருதி பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு இன்று (ஜன.6) முதல் பள்ளியில் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி இன்று (ஜன.6) தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கருத்து கேட்பது கூட்டம் நடைபெற்றது.

பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

தலைமையாசிரியை சசிகலைகுமாரி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு தங்களது கருத்தினை தலைமையாசிரியரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.

இதையும் படிங்க:மைய அரசியலைக் குறிவைக்கும் மக்கள் நீதி மய்யம்: காங்கிரஸுக்கு சவாலா?

ABOUT THE AUTHOR

...view details