திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து, திருக்கோயிலூர் பழைய ஆயக்கட்டில் உள்ள 5000 ஏக்கர் நிலத்தில் இரண்டாம் போக சாகுபடிக்காக 1200 மில்லியன் கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
இது நீர் பங்கீடு விதிகளின்படி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை 35 நாட்களுக்கு விவசாயிகளின் தேவைக்கேற்ப ஒரே தவணையில் சாத்தனூர் அணையைத் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டில் இடது கால்வாயில் 100 கன அடி நீரும், வலதுபுற கால்வாயில் 150 கன அடி நீரும் திறக்கப்பட்டது. இந்நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மலர்தூவி திறந்து வைத்தார்.
இரண்டாம் போக பாசனத்துக்காக சாத்தனூர் அணை திறப்பு இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இரண்டாம் போக விவசாயப் பாசனத்திற்கு சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.