தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செம்மரக் கடத்தல் ஏஜென்ட் அடித்துக் கொலை - போலீஸ் விசாரணை - Crime news

திருவண்ணாமலை ஜமுனாமரத்தூரில் செம்மரக்கட்டை பதுக்கல் தொடர்பான தகராறில் செம்மரக்கட்டை ஏஜென்டை கொலை செய்த சம்பவத்தில் வனத்துறை அலுவலர் உள்ளிட்ட மூன்று பேரை ஜமுனாமரத்தூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 13, 2023, 6:03 PM IST

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் செம்மரக்கட்டை ஏஜென்டாக இருந்து வருபவர், ராமதாஸ். கடந்த 9ஆம் தேதி செம்மரக்கட்டையை காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக வைக்க வேண்டுமென ஜமுனாமரத்தூர் வனத்துறை அலுவலர் ராஜாராமிடம், ராமதாஸ் உதவி கேட்டுள்ளார்.

செம்மரக்கட்டைக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என வனத்துறை அலுவலர் ராஜா ராம் தெரிவித்துள்ளார். இதனால் ராமதாஸிற்கும் ராஜாராமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வனத்துறை அலுவலர் ராஜாராம், குகன் மற்றும் கிருபாகரன் ஆகிய மூவரும் செம்மரக்கட்டை ஏஜென்ட் ராமதாஸை அடித்துக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வந்த ஜமுனாமரத்தூர் காவல் துறையினர் வனத்துறை அலுவலர் ராஜாராம் அவரது நண்பர்களான குகன் மற்றும் கிருபாகரன் ஆகிய மூவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். செம்மரக்கட்டை கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தேனியில் கெட்டுப்போன 25 கிலோ கோழிக்கறி பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details